பெட்ரோல், டீசல் விலை லேசாக உயர்வு

posted in: மற்றவை | 0

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை வரும் திங்கள்கிழமை முதல் லேசாக உயர்கிறது.

விற்பனையாளர்களுக்கு அளிக்கப்படும் கமிஷன் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசும், டீசல் விலை லிட்டருக்கு 4 காசும் உயர்கிறது.

பெட்ரோலுக்கு தற்போது ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.1,028 கமிஷன் வழங்கப்படுகிறது. அது ரூ.1,098 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல, டீசலுக்கு தற்போது ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.630 கமிஷனாக வழங்கப்படுகிறது. அது ரூ.670 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கமிஷன் உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு ஏற்படும் நஷ்டம், நுகர்வோர் மீது திணிக்கப்படுவதால் இந்த விலை உயர்வு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

இந்த சிறிய விலை உயர்வைக் கூட 3 மாநிலத் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் தான் மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *