புதுடில்லி : பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை, பங்குச் சந்தையின் நிலவரத்தைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, பிரணாப் முகர்ஜி கூறுகையில்,”பங்குச் சந்தை சாதகமாக இருக்கும் பட்சத்தில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனைக்கு வரும். எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு பங்குகளை விற்கப் போகின்றன என்பது போன்ற செய்தியை நான் இப்போது சொல்ல முடியாது. எனினும் ஆயில் இந்தியா லிமிடெட் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் இவற்றின் பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வரலாம்’ என்று தெரிவித்தார்.
Leave a Reply