மன்மோகன் சிங்குக்கு ஒபாமா விருந்து

posted in: உலகம் | 0

tblworldnews_66921633482வாஷிங்டன் : அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, அதிபர் ஒபாமா, சிறப்பு விருந்து அளிக்க உள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மதிப்புக்கு உரியவர் பிரதமர் மன்மோகன் சிங்.பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் குக்கு, முன்பு அதிபராக இருந்த புஷ்ஷும், தனது மாளிகைக்கு அழைத்து சிறப்பு விருந்து அளித்து பெருமைப்படுத்தியுள்ளார்.

இதே போல ஒபாமாவும், மன்மோகன் சிங் குக்கு வரும் 24ம் தேதி சிறப்பு விருந்து அளித்து கவுரவப்படுத்த உள்ளார். சமீபத்தில் இந்திய பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வெள்ளை மாளிகையில் விருந்தளிப்பதற்காக அழைப்பு விடுத்தார். இதையடுத்து, வரும் 24ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தனது மனைவியுடன், அதிபர் ஒபாமா அளிக்கும் விருந்தில் பங்கேற்க உள்ளார். வல்லரசு நாடான அமெரிக்கா, இந்திய பிரதமருக்கு தனிப்பட்ட முறையில் விருந்தளிப்பதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *