ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாயும் அவருடைய அமைச்சர்களும் தமது நிர்வாகத்தை முழுமையாகப் பொறுப்பேற்காத வரையில், அமெரிக்கா கூடுதலான சிவிலியன் உதவிகளை வழங்காது”.
இவ்வாறு அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கத் தொலைகாட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் சற்றுக் கடுமையாக கருத்து வெளியிட்ட ஹிலாரி,
“ஆப்கானிய அரசாங்கம் – கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையில், மக்களின் தேவைகளுக்குக் கூடுதலாக முகங்கொடுக்கிறது.
மக்கள் எதிர்பார்க்கும் சேவைகளை நிறைவேற்றுகிறது; பூர்த்தி செய்கிறது என்பதற்கு நிஜமான ஆதாரங்கள் கிடைக்க வேண்டும்” என்றும் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் நடைபெறும் யுத்தத்தை வெல்வது சாத்தியமே என்று அமெரிக்க மக்களுக்கு புரியவைக்க தமது அரசாங்கத்தால் இயலும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply