ஆயிரக்கணக்கில் பக்தர்கள் செல்லும் புல்லட் பாபா கோவில்

posted in: மற்றவை | 0

tblhumantrust_33390009404ஜெய்ப்பூர் : யானைக்குக் கோவில்; எலிக்குக் கோவில்; இதெல்லாம் நாம் கேள்விப்பட்டதுதான். ஆனால் புல்லட் கோவில் பார்த்ததுண்டா? ராஜஸ்தானிலுள்ள “புல்லட் பாபா’ கோவில் சொல்லும் கதைகள் ஏராளம். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர்-பாலி இடையே 65வது தேசிய நெடுஞ்சாலையில் சோட் டிலா கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்துக்கு அருகில் சாலையோரம் ஒரு மரத்தடியில் “புல் லட் பாபா’ கோவில் இருக்கிறது.

சோட்டிலா கிராமத் தலைவர் மகன் ஓம் சிங் ரத்தோர் என்ற ஓம் பானா என்பவர். இருபது ஆண்டுகளுக்கு முன், இவர் தனது ராயல் என்பீல்டு மோட்டார் பைக்கில், நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். இப்போதைய கோவில் இருக் கும் மரம் அருகில் ஒரு குழி இருந்தது. அவரது என்பீல்டு அந்த மரத்தில் மோதி அவர் குழியில் விழுந்து இறந்து போனார். அப்போதைக்கு அந்தச் சம்பவம் கிராமத்து மக்களுக்கு சாதாரணமாகத் தான் இருந்தது. அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் தான் அவர்களை பீதியடையச் செய்தன. ரத்தோரின் விபத்தைப் பதிவு செய்த போலீசார், அவரது என் பீல்டு பைக்கை போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர். பிறகு நடந்தது பற்றி ஓம் சிங் என்ற போலீஸ்காரர், “மறுநாள் அந்த பைக், விபத்து நடந்த மரத்தடியில் இருந்தது. “அதிர்ச்சியடைந்த நாங்கள், யாரோ குறும்பு செய்திருக்கின்றனர் என்று நினைத்து, அந்த பைக்கிலிருந்த பெட்ரோலைக் காலி செய்துவிட்டு, பைக்கை இரும்புச் சங்கிலிகளால் கட்டிவைத்துவிட்டோம். “இது நடந்த மறுநாள், பைக்கை போலீஸ் நிலையத்தில் காணவில்லை. தேடிப் பார்த் தால், அதே மரத்தடியில் அந்த பைக் இருந்தது. அவ் வளவுதான் போலீஸ் அத்தனை பேருக்கும் பேயடித்தாற்போல ஆகிவிட்டது’ என்று இப்போதும் வியக்கிறார்.

தொடர்ந்து, பல விபத்துக்கள் அதே இடத்தில் நடந்தன. பைக் போலீஸ் நிலையத்திலிருந்து வந்ததும், விபத்துக்களும் கிராம மக்களை திகிலடையச் செய்தன. பைக் மற்றும் ரத்தோருக்கு அதே இடத்தில் கோவில் கட்டினர். ரத்தோர் விழுந்த குழியின் மீது மேடை கட்டி அதில் அவரது படத்தை வைத்தனர். மேடைக்கு அருகில் பைக்கை நிரந்தரமாக நிறுத்தி மாலை போட்டனர். இந்தக் கோவிலுக்கு அந்தப் பகுதியில் இருக்கும் டிரைவர்கள் அனைவரும் பக்தர்கள் ஆகிவிட்டனர். ஒருநாள், டிரைவர் ஒருவர் இந்த இடத்துக்கருகில் தனது வேனோடு விபத்துக்குள்ளானார். குழியில் விழுந்த கிடந்த அவரை இறந்து போன ரத்தோர் வந்து கைகொடுத்து தூக்கி காப்பாற்றினாராம். இந்தச் செய்தி புயல் வேகத் தில் பரவியது. இப்போது அந்தச் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் சில நிமிடங்கள் நின்று கும்பிட்டு விட்டு செல் கின்றன.

கும்பிடும் டிரைவர்கள், தங் கள் கைகளில் மது பாட்டில் களோடு பைக்கை வலம் வருகின்றனர். சில மதுத் துளிகளை பைக்கின் முன் சக்கரத்தில் விடுகின்றனர். காலை,மாலை இருவேளைகளிலும் பூஜை, பஜனைகள் நடக்கின்றன. ரத்தோர் மகிமை பற்றிய பாடல்கள் இப்போது “சிடி’க் களாக கிடைக்கின்றன. மரத்தில் வளையல்கள், கயிறுகள் தொங்கவிடப்பட்டுள்ளன. ரத்தோர் படம் போட்ட கீசெயின்,மோதிரம், போட்டோக்கள் போன்றவையும் கிடைக்கின் றன. கைலாஷ் என்ற பக்தர்,”இந்தக் காலத்தில் எத்தனையோ பாபாக் கள் இருக்கின்றனர். ஆனால் எங்கள் “புல்லட் பாபா’ இருப் பது இங்கு மட்டும்தான்’ என்று புளகாங்கிதத்துடன் சொல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *