இடம் பெயர்ந்த தமிழர்கள் நலனுக்காக ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் பிரசாரம்

posted in: உலகம் | 0

17-amnesty-international200கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்கள் என்ற பெயரில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பக் கோரி ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பினரும், அதன் ஆதரவாளர்களும் உலகம் தழுவிய பிரசார இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.

10க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நடவடிக்கைப் பிரசாரம் தொடங்கியுள்ளது. அன்லாக் தி கேம்ப்ஸ் என்ற பெயரில் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு்ளது.

கனடாவில் நம்பிக்கை வளையம், தெரு பேரணி, நேபாளத்தில் கையெழுத்து இயக்கம், சுவிட்சர்லாந்தில் கவிதை பாடுதல், பிரான்ஸ், ஜெர்மனி, மொரீஷியஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆதரவ நடவடிக்கைகள் என்று இந்தப் பிரசாரத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லண்டனச் சேர்ந்த ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் செயல்வீரர்கள் ஒரு வார காலத்திற்கு இந்த நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.

இதில் கலந்து கொள்வோர் பிளாக்குகள், இணையதளங்கள் மூலம் தங்களது நிகழ்ச்சிகள் குறித்து தொடர்ந்து எழுதி வரவுள்ளனர்.

ஈழப் போர் முடிந்து 6 மாதங்களாகியும் இன்னும் முகாம்களிலேயே அப்பாவித் தமிழர்களை அடைத்து வைத்துள்ளது இலங்கை அரசு. அடிப்படை வசதிகள் மோசமான முறையில் உள்ள சூழ்நிலையில் மிகுந்த வேதனையில் உழன்று வரும் அப்பாவி மக்களை மீட்பதற்காக இந்த முயற்சியை ஆம்னஸ்டி மேற்கொண்டுள்ளது.

சமீபகாலமாக முகாம்களிலிருந்து வெளியேற்றப்படும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் கூட இன்னும் அங்கு இருக்கும் பெருமளவிலான மக்கள் தொடர்ந்து அவலமான நிலையில்தான் உள்ளனர். மழைக் காலமும் தற்போது வந்து விட்டதால் தமிழர்களின் சொல்லி மாளாத முடியாத அளவில் உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், ஐ.நா. மனிதாபிமான விவகாரப் பிரிவின் செயலாளற் ஜான் ஹோம்ஸ் இலங்கை வருகிறார். 3 நாள் பயணமாக ஹோம்ஸ் வருகிறார். இருப்பினும் இலங்கையின் அடாவடி பிடிவாதத்தை மீறி ஹோம்ஸ் என்ன செய்து விட முடியும் என்று தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *