சென்னை: “”இந்தியாவில் தொழில் துவங்க மலேசியா, இந்தோனேசியா தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,” என்று, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரி கூறினார்.
மத்திய அமைச்சர் அழகிரி, மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு அவர் சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: மலேசியா, இந்தோனேசியா நாடுகளில் சுற்றுப் பயணம் செய்த போது, அங்குள்ள தொழிலதிபர்களையும் சந்தித்து பேசினேன். அப்போது, இந்தியாவிலும், தமிழகத்திலும் தொழில் துவங்க வரும்படி அவர்களை அழைத்தேன். அதற்கான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்யும் என உறுதியளித்தேன். இதையடுத்து, இந்தியாவில் தொழில் துவங்க முன்வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு அமைச்சர் அழகிரி கூறினார்.
Leave a Reply