சென்னை: சிம்ப்ளி ரிலையன்ஸ் திட்டத்தின் கீழ் மேலும் 2 புதிய கட்டண திட்டங்களை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நேற்று அறிமுகம் செய்தது. இதுகுறித்து இந்நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவு தலைமை செயல் அதிகாரி அஜய் அவஸ்தி கூறியதாவது:
கட்டண குழப்பத்தை தவிர்ப்பதற்காக, நாடு முழுவதும் ஒரே கட்டண விகிதம் கொண்ட Ôசிம்ப்ளி பர் மினிட்Õ திட்டம் கடந்த மாதம் அறிமுகமானது. இதன்படி, எஸ்டிடி, லேண்ட்லைன் மற்றும் மற்ற நிறுவன செல்போன் எண்களுக்கான கட்டணம் நிமிடத்துக்கு 50 பைசா மட்டுமே. இன்கமிங், அவுட்கோயில் ரோமிங் கட்டணமும் ஒரே மாதிரியாக இருக்கும். ஜிஎஸ்எம், சிடிஎம்ஏ அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இது பொருந்தும். இந்த வரிசையில் இப்போது மேலும் 2 திட்டங்களை அறிமுகம் செய்கிறோம். Ôசிம்ப்ளி பர் செகன்ட்Õ திட்டத்தின் படி, ஒரு வினாடிக்கு ஒரு பைசா கட்டணமும், Ôசிம்ப்ளி பர் கால்Õ திட்டத்தின்படி, 3 நிமிடங்களுக்கு 1 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். பழைய வாடிக்கையாளர்கள் முறையே ரூ.58, ரூ.38 செலுத்தி இந்த வசதியை பெறலாம். வினாடி அடிப் படையிலான கட்டணத் தில் 3 நிமிடத்துக்கு ரூ.1.80 ஆகும். எனவே, அதிகமாக பேசுபவர்களுக்கு சிம்ப்ளி பர் கால் திட்டம் பயனுள் ளதாக இருக்கும். குறைவாக பேசுபவர்கள் சிம்ப்ளி பர் செகன்ட் திட்டத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றார்.
Leave a Reply