சென்னை: சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு சொந்தமான 400 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தில், தனியாருக்கு பட்டா வழங்க அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித் துள்ளது.
மாம்பலம் – கிண்டி தாசில்தார் தாக்கல் செய்த மனு: மாம்பலம் – கிண்டி தாலுகாவில் “கிங்’ இன்ஸ்டிடியூட்டுக்கு சொந்தமான இடங்கள் உள்ளன. இந்த நிலங்களில் ஒன்பது பேருக்கு பட்டா வழங்க, சேப்பாக்கத்தில் உள்ள “செட்டில்மென்ட்’ அதிகாரி அனுமதி அளித்துள்ளார். நில ஆவணங்களைப் பார்க்கும் போது, அந்த இடம் அரசு புறம் போக்கு நிலம் என்றும், கிண்டியில் உள்ள “கிங்’ இன்ஸ்டிடியூட்டுக்கு சொந்தமானது என்றும் தெரிய வந்துள்ளது. இந்த நிலத்தை, கிங் இன்ஸ்டிடியூட், எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழகம், டி.என்.பி.எல்., மாசுக் கட்டுப்பாடுவாரியம் பயன்படுத்தி வருகின்றன.
கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடம் கிங் இன்ஸ்டிடியூட் வசம் உள்ளது. 1899ம் ஆண்டு இந்த இடத் தில் கட்டடம் கட்டப்பட்டது. அது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடமாக அறிவிக்கப்பட் டுள்ளது. குறிப்பிட்ட இந்த நிலத்தின் மதிப்பு 400 கோடி ரூபாய்க்கு மேல் வரும். நிலத்தின் பயன்பாடு குறித்து, “செட்டில்மென்ட்’ அதிகாரி பரிசீலிக்கவில்லை. அரசு புறம்போக்கு நிலம் என வகைப்படுத்தப்பட்ட பின், பட்டா வழங்கக் கோரிய மனுவை விசாரிக்க “செட்டில் மென்ட்’ அதிகாரிக்கு, அதிகார வரம்பு இல்லை.
அரசுத் துறைகளின் ஆவணங்களை கவனத்துடன் அதிகாரி ஆராய்ந்திருக்க வேண்டும். இன்னும் அந்த நிலங்கள் அரசு துறைகளின் வசம் உள்ளது. எனவே, செட்டில் மென்ட் அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட் டுள்ளது. மனுவை நீதிபதி தனபாலன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன் ஆஜரானார். “செட்டில்மென்ட்’ அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதி தனபாலன் இடைக்கால தடை விதித்தார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி சம்பந் தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
Leave a Reply