கிளிநொச்சிக்கு செல்ல பயந்த சரத் பொன்சேகாவை தைரியப்படுத்திய மஹிந்த: பாதுகாப்புத்தரப்பு

posted in: உலகம் | 0

sar_mahiஎனக்கு இதுவரை தோல்வியே இல்லை என்று கூறும் பொன்சேகா, கிளிநொச்சிக்குப் போகவே பயந்து கொண்டிருந்தார். அவரை ஜனாதிபதி ராஜபக்சதான் சமாதானப்படுத்தி, தைரியப்படுத்தினார் என்று இலங்கை பாதுகாப்புத்தரப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கைப் பாதுகாப்புத்தரப்பு வட்டாரத் தகவல்கள் கூறுகையில்,

எனது இராணுவ வாழ்க்கையில் ஒரு தோல்வியையும் சந்தித்தவன் இல்லை என்று பொன்சேகா கூறியுள்ளார். பயம் என்றால் என்ன என்றே தெரியாதவன் என்றும் கூறியுள்ளார். ஆனால் ஈழப் போர் முடிந்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கிளிநொச்சிக்குப் விஜயம் செய்தபோது உடன் வர அவர் பயப்பட்டார், அஞ்சினார், தைரியம் இல்லாமல் வர மறுத்தார்.

போர் முடிந்ததும், ஜனாதிபதி ராஜபக்ச கிளிநொச்சி போக விரும்பினார். அதை இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவிடமும் தெரிவித்தார்.

ஆனால் அந்த யோசனையை விட்டுவிடுமாறு ஜனாதிபதியிடம் கூறினார் பொன்சேகா. மேலும், கிளிநொச்சிக்கு ஜனாதிபதியுடன் வரவும் அவர் பயந்தார். போர் இன்னும் நடக்கிறது என்றும் கூறினார். தனது பயத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் ஜனாதிபதி, பொன்சேகாவுக்கு தைரியம் கூறினார். பயப்பட வேண்டாம். தைரியமாக என்னுடன் வாருங்கள் என்றும் கோரினார். இதையடுத்து வேறு வழியில்லாமல், தனது மனதில் இருந்த அச்சத்தை முழுமையாக விடாமல் அவர் அதிபருடன் செல்ல ஒப்புக் கொண்டார்.

அதன் பின்னர் போர் பாதித்த பகுதிக்கு துணிச்சலான பயணத்தை மேற்கொண்டு சாதனை படைத்தார் ஜனாதிபதி ராஜபக்ச. கடும் போர் நடந்து கொண்டிருந்தபோது போர்க்களத்திற்குச் சென்ற முதல் உலக அதிபர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.

அதேபோல மாவிலாறு சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் மீது போரை அறிவித்தார் ராஜபக்ச. அப்போது பொன்சேகா களத்திலேயே இல்லை. விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிக்கி அவர் மருத்துவமனையில் படுத்துக் கிடந்தார்.

மேலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் நாட்களலும் கூட போர் முனைக்கு அவர் ஒருமுறை கூட சென்றதில்லை. கொழும்பில் உட்கார்ந்து கொண்டு உத்தரவுகளை மட்டுமே பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

நான் ஒருபோதும் தோல்வியைச் சந்தித்ததில்லை என்று கூறும் பொன்சேகாவின் தலைமையில்தான் இலங்கை இராணுவத்திற்கு முகமாலை பகுதியில் 3 முறை தோல்வி கிடைத்தது. கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் உயிரிழந்தனர் என்று கூறியுள்ளனர். இவ்வாறு படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *