மும்பை:மகாராஷ்டிராவில் ரேஷன் கடைகள் மூலமாக சர்க்கரை, பருப்பு ஆகிய வற்றை சலுகை விலையில் பொதுமக்களுக்கு வழங்க, மாநில அரசு திட்டமிட் டுள்ளது.மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில், காங்.,- தேசியவாத காங்., கூட் டணி வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே ஏற் பட்ட கருத்து வேறுபாட் டால், புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டது.
ஒரு வழியாக தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்களுக்கு பின், நேற்று முன்தினம் அசோக் சவான் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது.இதையடுத்து, மும்பையில் உள்ள புகழ் பெற்ற சித்தி விநாயகர் கோவிலுக்கு நேற்று சென்ற அசோக் சவான், சிறப்பு பூஜைகள் செய்து, விநாயகரை வழிபட்டார்.இதுகுறித்து அசோக் சவான் கூறுகையில், “மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான சக்தியை அளிக்கும்படி விநாயகரிடம் வேண்டினேன்’என்றார்.
மகாராஷ்டிர முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், “அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பாதிக்கப் படுவதை தடுப்பதற்கு, அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதன்படி சர்க்கரை, பருப்பு, எண்ணெய் ஆகிய பொருட்கள், ரேஷன் கடைகள் மூலமாக சலுகை விலையில் வழங் கப்பட உள்ளன’ என்றனர். இதற்கிடையே, மகாராஷ்டிர புதிய சட்டசபையின் முதல் கூட்டத் தொடர், நாளை (இன்று) துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply