வாஷிங்டன்: இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய அமெரிக்கர், டேவிட் கோல்மேன் ஹெட்லியிடம் விசாரணை நடத்துவதற்காக “ரா’ மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அமெரிக்கா சென்றுள்ளனர்.
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் – இ- தொய்பா சார்பில், இந்தியாவில் நாசவேலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக, டேவிட் கோல்மேன் என்ற அமெரிக்கரையும், அவரின் கனடா நாட்டு நண்பர் தாவூர் ஹூசைன் ராணாவையும் அமெரிக்க எப்.பி.ஐ.,போலீசார் சிகாகோ நகரில் கைது செய்துள்ளனர். சிகாகோவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியும் ராணா மற்றும் கோல்மேனின் பள்ளி நண்பர். இவரிடமும் எப்.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி., ராகுலை கொல்ல ராணாவும், கோல்மேனும் சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரிப்பதற்காக இந்திய புலனாய்வு மற்றும் “ரா’ பிரிவு அதிகாரிகள் குழு வாஷிங்டன் சென்றுள்ளனர். இந்த குழுவினர் ராணாவிடமும், கோல்மேனிடமும் விரிவான விசாரணை நடத்த உள்ளனர்.
Leave a Reply