சுவிஸ்லாந்து வங்கிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதி காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பில் அரசாங்கம் முயற்சிகைள மேற்கொண்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள குமரன் பத்மநாதனிடம் நடத்திய விசாரணைகளின் மூலம் புலிகளின் சுவிஸ் சொத்து விபரங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய புலிகள் வலையமைப்பினால் திரட்டப்படும் நிதி சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் காணப்படும் இரண்டு வங்கிகளில் வைப்பிலிடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ள வங்கி இரகசியத் தன்மை காரணமாக இந்த சொத்து விபரங்கள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
இந்த சுவிஸ் வங்கிகளில் கணக்குகளைப் பேணி வரும் ஐந்து பேர் பற்றிய தகவல்களையும் குமரன் பத்மநாதன் வெளியிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல சொத்துக்களையும் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply