ஆமதாபாத் : “”உங்கள் குழந்தை சூப்பர் பேபியாக, அதாவது கருவிலேயே எல்லா அம்சங்களும் பொருந்தியதாக உருவாகி, “சூப்பர் பேபி’யாக பிறக்க வேண் டுமா? உடனடியாக வந்து சேருங்கள் “சூப்பர் பேபி பல்கலைக் கழகத்தில்” இப்படி விளம்பரம் செய்கிறார் மகரிஷி பிரகலாத படேல்.
“”அபிமன்யு, தன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது கிருஷ்ணனும் அர்ஜுனனும் சக்கர வியூகத் துக்குள் செல்வது குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அதற்குள் வேறு வேலை வந்து விடவே இருவரும் சென்றுவிட்டனர். அபிமன்யுவின் தாய் உத்தரா அப்போது அங்கிருந்தாள். கர்ப்பத்துக்குள் இருந்த அபிமன்யு இதைக் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான். பின்னாளில், யாரும் சொல்லிக் கொடுக்காமலே அபிமன்யு எதிரிகள் வகுத்த சக்கர வியூகத்துக்குள் புகுந்து துவம் சம் செய்தான்”. இப்படி மகாபாரதம் கூறுகிறது. “உண்மைதான், இன் றும் இது சாத்தியம்தான்’ என்கிறார் மகரிஷி பிரகலாத படேல். குஜராத் காந்திநகரில் அமர்நாத் தாம் என்ற பகுதியில் “சூப் பர் சைல்டு பல்கலைக் கழகம்’ என்று ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். இதில், கர்ப்பிணிப் பெண்களுக்கு சில பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தியானம், யோகா, வாசிப்பு, சொற்பொழிவு, விளக்கப்படங்கள் போன்ற பயிற்சிகள். இந்தப் பயிற்சியில் கர்ப்பிணித் தாயும் கணவரும் ஒரு வாரம் கலந்து கொள்ள வேண் டும். இந்தப் பயிற்சிகளின் மூலம், பிறக்கும் குழந்தை அதிபுத்திசாலியாக விளங்கும் என்பதுதான் பிரகலாதாவின் கொள்கை.
பிரபலமாகி வரும் இந்தப் பல்கலையில் இப்போது கூட்டம் நிறைய வருகிறது. இப்போதைய கட்டணம் உணவு போக 1,100 ரூபாய். இதை ஐந்தாயிரமாக உயர்த்த திட்டமிட்டிருக்கிறார் பிரகலாதா. குஜராத்தி சினிமா, “டிவி’ புகழ் நடிகை கோமல் பாஞ்சால், 11 பேர் கொண்ட முதல் குழுவில் தன் கணவருடன் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைந்ததாகக் கூறியுள்ளார். அவரைத் தொடர்ந்து, தொழிலதிபர் சஞ்சய் நாகர் தன் மனைவியுடன் கலந்து கொண்டிருக்கிறார்.”நமது சிந்தனையில் நான் நம் பிக்கை வைத்துள்ளேன்’ என்கிறார் நாகர். இதனால், இந்தப் பயிற்சி மேலும் பிரபலமடைந்துள்ளது. மகரிஷி பட்டத்தை யோகா குரு பாபா ராம் தேவ் தனக்கு சூட்டியதாகப் பெருமைப்படும் பிரகலாத படேல், “உளவியல், அறிவியல், ஆன்மிகம் மூன்றையும் கலந்து இந்தப் பயிற்சியில் கொடுக்கிறேன். நம் ரிஷிகள், கல்வி என்பது கருவிலேயே தொடங்கி விடுகிறது என்கின்றனர்’ என்று கூறுகிறார்.
“சூப்பர் சைல்டு’ என்று தனது பயிற்சியைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக் கிறார். இந்தப் பயிற்சியின் மூலம் பிறக்கும் சூப்பர் குழந்தைகளுக்காக “சூப்பர் பேபி இன்ஸ்டிடியூட்’ என்ற பள்ளியையும் துவக்கத் திட்டமிட்டிருக் கிறார் பிரகலாதா. “இந்தப் பயிற்சிகளால் எள்ளளவும் பயனில்லை’ என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். “புத்திசாலித்தனத்தை கருவிலேயே தர முடியும் என்பதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை. போட்டி நிறைந்த உலகத் தில் குழந்தைகள் அதிபுத்திசாலியாக விளங்க வேண் டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானதுதான். பிறந்த பிறகு பயிற்சியின் மூலம்தான் அப்படி செய்ய முடியும்’ என்று வாதிடுகின்றனர்.
Leave a Reply