தங்கம் போலவே, மளிகையும் தாறுமாறாக விலை உயர்வு தவிக்கும் மக்களுக்கு தீர்வு?

posted in: மற்றவை | 0

tbltnsplnews_57741510869தங்கம் போல, மளிகைப் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடும் பாதிப் புக்கு உள்ளாகி, அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மளிகைப் பொருட்களின் விலை கடந்த ஆறு மாதத்தில் 10 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. முன்பு கிலோ 50 – 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு 95 ரூபாயை தொட்டு நிற்கிறது. இரண்டு மாதத்துக்கு முன் இது போன்ற விலை உயர்வு ஏற் பட்ட போது, மக்களிடம் கடும் அதிருப்தி எழுந்தது.

ரேஷன் கடைகளுக்கு துவரம் பருப்பை கொள்முதல் செய்வதில் தமிழக அரசு சிறிது மாற்றம் செய்ததாலும், அதிகள அளவில் துவரம் பருப்பை இறக்குமதி செய்ததாலும் அதன் விலை கிலோ 80 ரூபாயாக குறைந்தது. தற்போது, பழையபடி மீண்டும் 100 ரூபாயை எட்ட முயற்சிக்கிறது. அதே போன்று, முன்பு கிலோ 45 -55 ரூபாய்க்கு விற் கப்பட்ட வெள்ளை உளுந்தம் பருப்பு கிலோ 87 ரூபாய், கருப்பு உளுந்தம் பருப்பு 77 ரூபாய் என்ற அளவில் கடுமையான ஏற்றம் கண்டுள்ளது. பாசிப்பயறு விலையும் கிலோ 86 ரூபாயாக உயர்ந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் வரை கிலோ 18 -20 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த சர்க்கரை விலையும் கணிசமாக அதிகரித்து, கிலோ 33 ரூபாயை கடந்து நிற்கிறது. இந்நிலை நீடித்தால், கிலோ 40 ரூபாயை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின் றனர் வர்த்தகர்கள்.

கோதுமை ரவை கிலோ 24 ரூபாயிலிருந்து 38 ரூபாயாக உயர்ந்துள்ளது; கோதுமை மாவின் விலையும் உயர்ந்துள்ளது. பூண்டு விலை கிலோ 100 ரூபாயில் இருந்து 170 ரூபாயாக எகிறியுள்ளது. மளிகை பொருட்களின் விலை இதற்கு முன் ஏறிய போதெல்லாம், இவ்வாறு கிலோவுக்கு 10, 20 ரூபாய் என ஒரேயடியாக அதிகரிக்கவில்லை. தற்போது, மளிகைப் பொருட்களின் விலை தாறு மாறாக உயர்ந்திருப்பதால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளனர். முன்பு, நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் மாத மளிகை பட்ஜெட்’ செலவை அதிகபட்சமாக 900 ரூபாய் முதல் 1,200 ரூபாய்க்குள் அடக்கிவிட முடியும். ஆனால், தற்போதைய கடுமையான விலை ஏற்றம் காரணமாக 1,700 ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டியிருப்பதாக, நடுத்தர வர்க்க இல்லத்தரசிகள் புலம்புகின்றனர்.

ரேஷன் கடையில் கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு கிடைத் தாலும், பருப்பு வகை கிடைப்பதில்லை. ஒவ்வொரு ரேஷன் கடைக்கும், பருப்பு சப்ளை மிகவும் குறைவாகவே உள்ளது. ரேஷன் கடைக்கு வந்த நாளிலேயே துவரம்பருப்பு தீர்ந்துவிடுகிறது. ரேஷன் கடைகளிலும் பருப்பு கிடைக் காமல், வெளிமார்க்கெட்டில் இருக்கும் பருப்பை அதிக விலை கொடுத்து வாங்க முடியாமலும் மக்கள் பெரும் சிரமத்துக்கும், அதிருப்திக்கும் ஆளாகியுள்ளனர். மளிகை பொருட்களின் விலை இப்படி என்றால், காய்கறிகளின் விலையும் கட்டுப்பாடின்றி கொடி கட்டி பறக்கிறது.

பருவமழை வெளுத்து வாங் கும் நிலையில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து கோவை மார்க் கெட்டுக்கு தக்காளி, பெரிய வெங்காயம் உள்ளிட்ட காய்கறி களின் வரத்து தடைபட்டுள்ளது. உள்ளூரிலும் தொடர் மழை பொழிவதால் காய்கறி அறுவடை பணிகள் பாதிக்கப்பட் டுள்ளன. இவ்விரு காரணங்களாலும் கோவை மார்க்கெட்களில் காய் கறி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. மளிகை மற்றும் காய்கறிகளின் விலை உயர்வு அதிகரித்துக் கொண்டே போவதால், மக்களின் புலம்பலும் கூடிவிட்டது.

“காய்கறி விலை உயர்வுக்கு மழையே காரணம்’ என சாக்கு போக்கு கூறினாலும், மளிகை பொருட்களின் கடும் விலை உயர்வுக்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக தெரியவில்லை. விளைபொருள் கொள்முதல் கொள்கையில் தேவையான மாற்றங்களை அமல் படுத்தவும், உணவுப் பொருட்களை அதிகளவில் பதுக்கி வைத்து செயற்கையான விலை உயர்வை ஏற்படுத்துவோர் மீதான நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தவும் தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலும் எழுந்துள்ளது. இது குறித்து, மளிகைப் பொருள் வியாபாரிகள் கூறுகையில்,”தங்கத்துக்கு போட்டியாக, மளிகை பொருள் விலையும் கூடிக்கொண்டே போகிறது. இதை தடுக்க தமிழக அரசு போதிய நடவடிக்கை மேற் கொள்ளாவிடில், அவப்பெயர் ஏற்படுவதை தவிர்க்க முடியாது’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *