ஏழு வயதுச் சிறுமி ஒருத்தி, தனது முற்பிறவியில் தான், தலாய்லாமாவின் உதவியாளராக இருந்ததாகக் கூறிவருகிறாள். இந்தச் சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆசார்ய சாம்பவி (7), தனது பெற்றோர்களுடன் உத்தரபிரேதசம் வாரணாசியில் வசித்துவந்தாள். எல்லாக் குழந்தைகள் போலவே சாதாரணமாக இருந்தவள், வளர வளர திபெத் பற்றியும் அதன் விடுதலை பற்றியும், புத்த மதம் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டாள்.
சாதாரணமாக இருந்த தங்களது குழந்தை, இப்படி பேசுவதைப் பார்த்த அவளது பெற்றோர்கள் தங்கள் பூர்விகமான ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்திலுள்ள நந்தியாலுக்கு வந்து விட்டனர். அங்கு தினசரி சாம்பவி ஆன்மிகப் பேருரைகள் செய்ய ஆரம்பித்தாள்.
இந்தச் சின்ன வயதில் பெரிய விஷயங்களைப் பேசியதால், அந்தப் பகுதியில் பிரபலமானாள் சாம்பவி. புத்தமதம், திபெத், சீனாவிடமிருந்து அதன் விடுதலை ஆகியவை பற்றி விரிவாகப் பேச ஆரம்பித்தாள். இதுகுறித்து கூறுகையில்,”என் வாழ்க்கையின் குறிக்கோள் திபெத்தின் விடுதலையைக் காண்பதுதான். 2012ல் திபெத் விடுதலையாகிவிடும். நான் முற்பிறவியில் தலாய்லாமாவின் உதவியாளராக இருந்தேன்’ என்று தெரிவித்தாள்.
“ஆன்மிகத்தின் பெயரால், சாம்பவியைத் தொந்தரவு செய்கின்றனர். இது குழந்தைகள் உரிமைகளை மீறுவதாகும்’ என்று பகுத்தறிவாளர்கள் ஆந்திரமாநில மனித உரிமைக் கமிஷனில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக, கர்நூல் மாவட்ட கலெக்டர் முகேஷ் குமார் மீனா, சாம்பவி, அவளது பெற்றோர், அவளது உறவினர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்
Leave a Reply