வாஷிங்டன் : பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு அனைத்து பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உண்டு என, முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் இது குறித்து சி.என்.என்., “டிவி’க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அல்-குவைதா, தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் ஐ.எஸ்.ஐ.,க்கு தொடர்பு உண்டு. இதற்காக ஐ.எஸ்.ஐ., பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது என்பது அர்த்தமல்ல. தங்கள் புலனாய்வுத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்காக இந்த அமைப்புகளுடன் ஐ.எஸ்.ஐ., தொடர்பு வைத்துள்ளது. இதே போல ஆப்கானிஸ்தான் உளவு அமைப்பு, இந்திய உளவு அமைப்பின் துணையுடன் செயல்படுகிறது. இதனால் தான் ஆப்கானிஸ்தான், சில விஷயங்களில் பாகிஸ்தானை குறை கூறுகிறது. ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டுப் படைகளை யாரும் அழைக்கவில்லை. ஆனால், அல்-குவைதாவையும், தலிபான்களையும் ஒடுக்க வேண்டிய கட்டாயம் இந்த படைகளுக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு முஷாரப் கூறினார்.
Leave a Reply