இலங்கையில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாகக் கருதும் அந்நாட்டு அரசு, அவர்களது சர்வதேசத் தொடர்புகளால் கவலை அடைந்துள்ளது. புலித் தலைவர் பிரபாகரனின் மரணத்துக்குப் பிறகு, இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக, அந்நாட்டு அரசு கருதுகிறது.
ஆனாலும், அவர்களது சர்வதேச தொடர்புகளை இலங்கை அரசால் முழுவதுமாக அடையாளம் காண முடியவில்லை. அப் படியே கண்டறிந்தாலும், அவற்றை அறுத்தெறிவது,சிரமமான காரியம் என்பதை உணர்ந்துள்ளது.ஆனாலும், புலி களின் சர்வதேசத் தொடர்புகளைச் சிதறடிக்கா விட்டால், மீண்டும் அவர்கள் தலையெடுக்க வாய்ப்பாகி விடும் எனக் கவலைப்படும் இலங்கை அரசு, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக,கொழும்பில் நடந்த ஒரு கல்லூரி நிகழ்ச்சியில்,இலங்கை அரசின் பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ஷேபேசியதாவது: பிரிவினைவாதத்தை முற்றிலும் ஒழிப்பதே அரசின் முக்கிய சவாலாக உள்ளது. பொருளாதாரம், சமூகம், கலாசாரம் போன்றவற்றில் தமிழர்கள் இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவதற்கான சூழலைத் தோற்றுவிப்பதன் மூலமே, புலிகளுக்கு எதிரான போராட்டத்தின் முழுமையான வெற்றியை அடைய முடியும்.
ராணுவ ரீதியாக புலிகள் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், சர்வதேச ரீதியாக அவர்களுக்கு ஆதரவாக பெரிய வலைப் பின்னல் (நெட்வொர்க்) உள்ளது. புலிகள் மீண்டும் தலை யெடுப்பதை தடுக்க வேண்டுமானால், இந்த வலையமைப்பைச் சிதறடிக்க வேண்டும். இதுவரை நாம் அடைந்த வீழ்ச்சிக்குக் காரண மாக சிந்தனைக்குள் மீண்டும் விழாமலும், குறுகிய மனப்பான்மையோடு செயல்படாமலும், முரண்பாட்டு அரசியலில் ஈடுபடாமலும், ஒரே தேசமாக ஒன்றிணைந்து, சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
பயங்கரவாத அழிவின் மூலம் கிடைத்த வாய்ப்பை,இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏற்ற பொருளாதார மறு மலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
Leave a Reply