மாரடைப்பில் சுருண்ட எஜமானரை காப்பாற்றிய நாய்

posted in: மற்றவை | 0

வார்சா : மாரடைப்பால் தரையில் சுருண்டு விழுந்த எஜமானரை காப்பாற்றியது செல்ல நாய். போலந்து நாட்டில் வார்ஸா நகரில் வசித்து வருபவர் ஸ்ட்ரைகன் பையோடர் வேக்னர் (50), இவர் வளர்க்கும் செல்ல நாய் ஜேக் ரஸ்ஸல். இரண்டு வயது ஆகிறது.

சமீபத்தில், வீட்டில் “டிவி’ பார்த்துக் கொண்டிருந்தார். அப் போது வீட்டில் யாரும் இல்லை. செல்ல நாய் மட்டும் இவருடன் இருந்தது. ரசித்து பார்த்துக் கொண்டிருந்த இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வலி தாங்கமுடியாமல் மார்பை பிடித்துக் கொண்டு சாய்ந்து விட்டார். எஜமான் மார்பை பிடித்து கொண்டு சாய்கிறாரே; ஏதோ வலியால் துடிக்கிறார் என்று உணர்ந்த நாய், தனது பின்னங்காலுக்கு மேல் உள்ள “இதய’ வடிவிலான சதை பகுதியை வைத்து அவர் மார்பில் இறுக தேய்த்துள்ளது. அதனால் வேக்னர் படிப்படியாக வலி குறைந்து பழைய நிலைக்கு வந் துள்ளார். பின்னர், மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றார்.

டாக்டர்கள் கூறுகையில், “வேக்னருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது நாய் சமயோசிதமாக செயல்பட்டு அவரது வலியை குறைத்துள்ளது. “அதனால் தான் அவரால் இங்கு வந்து சிகிச்சை பெற முடிந்தது. நாய் செய்த செயலால் அவர் உயிர் பிழைத்துள்ளார்’ என்றனர். வேக்னர் தனது செல்லப்பிராணி பற்றி கூறுகையில், “எனது நாயின் செயல் கண்டு பிரமித்து போய் உள்ளேன்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *