முதலீட்டாளர்களுக்காக பங்குச்சந்தையில் சீர்திருத்தம்: செபி

9910046மும்பை: முதலீட்டாளர்களை கருத்தில் கொண்டு பங்குச்சந்தையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொண்டு வருவதாக செபி(இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம்) தலைவர் சி.பி.பாவே கூறியுள்ளார்.


இதுகுறித்து மேலும் அவர் கூறும் போது, பொதுப் பங்கு வெளி​யீ​டு​களை பரி​சீ​லனை செய்​யும் காலத்தை ஒரு வார​மா​கக் குறைக்க நட​வ​டிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கி​றது. நி​று​வ​னங்​கள் பொதுப் பங்கு வெளி​யீடு மூலம் நிதி திரட்​டி​னால்,​ பங்கு வெளி​யீட்டு இறுதி தேதியி​லி​ருந்து 20 நாட்​க​ளுக்​குப் பிறகே அவை பங்​குச் சந்​தை​யில் பட்​டிய​லி​டப்​ப​டு​கின்​றன. மாறாக பங்​கு​களை பரி​சீ​லனை செய்​யும் காலத்தை ஒரு வார​மா​கக் குறைக்க செபி நட​வ​டிக்கை எடுத்து வரு​கி​றது. இன்​னும் ஓராண்​டில் இந்த இலக்கு எட்​டப்​ப​டும் என்று பாவே தெரி​வித்​தார். மேலும், தகு​தி​யுள்ள நிறு​வ​னங்​க​ளுக்கு ஏல முறை​யில் பங்​கு​களை விற்​பனை செய்​யும் முறை​யும் அறி​மு​கப்​ப​டுத்​தப்​பட்​டுள்​ளது. இத​னால் நிறு​வ​னங்​கள் குறைந்​த​பட்ச விலையை நிர்​ண​யித்து,​ முத​லீட்டு நிறு​வ​னங்​கள் அதி​க​பட்ச விலையை ஏலம் மூலம் தீர்​மா​னிக்க வகை செய்​யப்​பட்​டுள்​ளது. ப​ரஸ்​பர நிதித் திட்ட முத​லீட்​டில் உள்ள செல​வைக் குறைக்க நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டு​கி​றது என்​றும் பாவே தெரி​வித்​தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *