மும்பை: மேடாஸ் இன்பரா லிமிடெட் ரூபாய் 790 கோடி மதிப்பில் ஒப்பந்தம் ஒன்றை பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ஐ.எல்., அன்ட் எப்.எஸ் டிரான்ஸ்போர்ட் நெட்வொர்க் லிமிடெடிடம் இருந்து இந்நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி, பூனே-சேலாபூர் இடையிலான சாலை அமைக்கும் பணியை மேடாஸ் இன்பரா நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. சாலை அமைப்பதற்கான டிசைன், பைனான்ஸ், ஆப்ரேட் மற்றும் டிரான்ஸ்பர் உள்ளிட்ட விஷயங்களை இனி மேடாஸ் இன்பரா நிறுவனம் பார்த்து கொள்ளும். இந்த திட்டம், 20 மாதங்களுக்குள் முடிவடைந்து விடும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த ஒப்பந்த அறிவிப்பு காரணமாக மேடாஸ் இன்பரா நிறுவன பங்குகள் இன்று 2.42 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply