வாஷிங்டன் : போலி ஆவணங்களின் அடிப்படையில், மருத்துவ செலவுக்காக அமெரிக்கா ரூ.2.2 லட்சம் கோடி செலவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அசோசியேட்டடு பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு வழங்கியுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த 20 ஆண்டுகளில் மருத்துவ செலவுகளுக்காக மொத்தம் ரூ.20.68 லட்சம் கோடியை அரசு செலவிட்டுள்ளது. மருத்துவ செலவுக்கான ஆவணங்களை பரிசீலித்தபோது, மருத்துவர்களின் கையெழுத்து இல்லாமலோ, தெளிவு இல்லாமலோ இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு முறையற்ற ஆவணங்கள் அடிப்படையில் ரூ.2.2 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இத்தகைய முறைகேட்டை தடுக்க அமெரிக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு நவீன நடைமுறைகளை புகுத்தி வருகிறது. இதன் மூலம், 12.4 சதவீதமாக உள்ள முறையற்ற செலவை அடுத்த ஆண்டில் 9.5 சதவீதமாக குறையும். அதாவது, ரூ.45,590 கோடி மிச்சமாகும். ஆவண பிழைகளைக் குறைப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்கப்படு வேண்டும். மேலும் ஆவணங்களில் தவறான தகவல் இடம் பெற்றிருந்தால் அபராதம் விதிக்க வகை செய்ய வேண்டும் என அதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Leave a Reply