டெல்லி: இந்தியாவின் நெம்பர் 2 மொபைல் சர்வீஸ் நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் இரண்டாவது காலாண்டு லாபம் பாதிக்கும் மேல் குறைந்துள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்த நிறுவனம் 51.7 சதவிகித லாபத்தை இழந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் லாபம் ரூ.15310 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு இதுவே ரூ 7400 கோடியாக குறைந்துள்ளது.
போட்டி நிறுவனங்களைச் சமாளிக்க ரிலையன்ஸ் மொபைல் அழைப்புக் கட்டணத்தை நொடிக்கு ஒரு பைசாவாக மாற்றியதும் இந்த லாப வீழ்ச்சிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த வீழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள அனில் அம்பானி, “மிகுந்த சவாலான ஒரு சூழலில் நிறுவனம் அடியெடுத்து வைத்துள்ளது. ஆனால் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் நிலைமையைச் சமாளிக்க முடியும்” என்றார்.
Leave a Reply