லிபரான் கமிஷன் அறிக்கை கசிந்தது : பார்லி.,யில் அமளி – ஒத்திவைப்பு

posted in: அரசியல் | 0

tblfpnnews_68459284306புதுடில்லி : அயோத்தியில் உள்ள பாபர்மசூதி இடிப்பு தொடர்பான லிபரான் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்படும் முன்பு கசிந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. மத்திய அரசுக்கு புது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று பார்லிமென்டில் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடர்ந்து சபையை நடத்த முடியாமல போனதால் ஒத்தி வைக்கப்பட்டது.

கரும்பு விலை நிர்ணயம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த வியாழக்கிழமை பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அன்று, டில்லியில் விவசாயிகள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணியும் நடைபெற்றது. இதனால், மறுநாளும் பார்லிமென்டில் பிரச்னை கிளம்பியது. இந்தப் பிரச்னையை சுமுகமாக முடிக்க வேண்டும் என்பதற்காக, அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசு ஆலோசித்தது. இதையடுத்து, அவசர சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வர தீர்மானிக்கப் பட்டது.

கரும்பு விலை நிர்ணய பிரச்னை இப்படி சுமுகமான முறையில் முடிவடைந்து விட்டாலும், இன்று மீண்டும் துவங்கிய பார்லிமென்டில், லிபரான் கமிஷன் அறிக்கை லீக் ஆன விவகாரம் எதிரொலித்தது.

சபையில் அத்வானி ஆவேசம் : இந்நிலையில் இன்று சபை கூடியதும் , லிபரான் கமிஷன் அறிக்கை கசி்ந்தது தொடர்பாக பா. ஜ., எம். பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து லோக்சபாவில் பேசிய எதிர்‌கட்சி தலைவர் அத்வானி பேசுகையில் : கமிஷன் அறிக்கை லீக் ஆன செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இதில் பா.ஜ., முக்கிய தலைவர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் லீக் ஆன செய்தி கூறுகிறது. அறிக்கை முறைப்படி பார்லி.,மென்டில் தாக்கல் செய்யப்படும் முன்பு எப்படி லீக் ஆனது. இதற்கு காங்கிரஸ் அரசே காரணம். இது குறித்து மத்திய அரசு முழு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக பா.ஜ., எம்.பி.,க்கள் கூச்சலிட்டதால் சபை ஒத்திவைக்கப்பட்டது. இதுபோல் ராஜ்யசபாவும் ஒத்திவைக்கப்பட்டது.

திட்டமிட்டு இடிக்கப்பட்டது : லீக்கான அறிக்கையில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முரளிமனோகர் ஜோஷி ஆகியோர் முக்கிய காரணமாக இருந்தனர். பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்டே நடத்தப்பட்டது என கூறப்பட்டுள்ளது. மேலும் முஸ்லிம் தலைவர்களில் சிலரையும் , பாபார் மசூதி தொடர்பான ஆக்ஷன் கமிட்டியை‌யும் குறை கூறியுள்ளது. என ‌தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உள்துறை அமைச்சக வட்டாரம் கூறியுள்ளதாகவும் இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த சர்ச்ச‌ை குறித்து உள்துறை அமைச்சர் ப., சிதம்பரம் நடப்பு கூட்டத்தொடரில் லிபரான் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *