ஸ்ரீவில்லிபுத்தூர்:”வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெறும் வகையில், பார்மசி பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்படும்’ என, தமிழ்நாடு பார்மசி கவுன்சில் தலைவர் சின்னசாமி தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு பார்மசி கவுன்சில் தலைவர் சின்னசாமி பேசுகையில், “நமது நாட்டிலுள்ள பார்மசி கல்வி, வெளிநாடுகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும்.லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வேலையில் சேரும் வகையில் கல்வித்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும்.
பார்மசி பட்டய படிப்பு முடித்தவர்கள் தங்களது தகுதியை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் மூன்றாண்டு பகுதிநேரப் படிப்பு அமல்படுத்தப்பட உள்ளது’ என்றார்.
Leave a Reply