மும்பை : “சர்வதேச தத்தெடுத்தல், அதாவது வெளிநாட்டிற்கு தத்தெடுத்து செல்லும் குழந்தைகள், பின்னர் கைவிடப்பட்டு இந்தியாவிற்கு திரும்பும் சூழ்நிலையில், அவர்களை பராமரிக்க தேசிய குழந்தைகள் நலநிதி ஒன்றை அமைக்க வேண்டும்’, என மும்பை ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது.
வெளிநாட்டினர் குழந்தைகளை தத்தெடுத்து செல்லுதல் தொடர்பான வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்கும் இறுதி வேலைகளில், நீதிபதி சந்திரசூட் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக, மும்பை ஐகோர்ட்டில் நடந்த வழக்கில் நீதிபதிகள் கூறியதாவது: இங்கிருந்து தத்தெடுத்து சென்ற பின், அவர்களை கைவிடுதல், அல்லது சொந்த நாட்டிற்கே திரும்பி செல்ல கட்டாயப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் குழந்தைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். எனவே, தத்தெடுப்பதற்கு முன், 2.50 லட்சம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும். பின்னர், இந்தியாவிற்கு திரும்பும் குழந்தைகளுக்கு ஆதரவளிக்க பயன்படுத்தப்படும்.குழந்தைகளை தத்து கொடுப்பதற்கு முன், அவர்களின் மனநலம் குறித்து பரிசோதனை செய்வது கட்டாயம்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், ஜெனிபர் ஹைனஸ் என்பவரை, அமெரிக்க தம்பதியினர் தத்தெடுத்து சென்றனர். பின், அவர் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவருக்கு தற்போது, தங்குவதற்கு எந்த இடமும் இல்லை என, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார்.அதே போன்று 14 சிறுமிகளை தத்தெடுத்து சென்ற அமெரிக்க தம்பதியினர், சிறுமிகளுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதும் திருப்பி அனுப்பி விட்டனர்.இவ்வாறு திருப்பி அனுப்பப்படும் குழந்தைகள் அதிகரித்து கொண்டே வருவதால், ஐகோர்ட் சில பரிந்துரைகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply