13வது திருத்தத்திற்கு மேல் செல்லத் தயார்;முன்னாள் புலிகளின் ஆதரவையும் ஏற்பேன்: பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா பேட்டி

posted in: உலகம் | 0

sarath_18இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லமுடியும் எனவும், முன்னாள் புலி உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதனை இன்முகத்துடன் வரவேற்பேன் என்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி றைமையினை இல்லாதொழித்து பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறக்கூடிய ஜனநாயக ஆட்சியை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன். பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசப்படுகின்றது. இது 20 வருடங்களுக்கு ன்னர் பேசப்பட்ட விடயமாகும்.

அன்றிருந்த நிலைமையும் தற்போதுள்ள நிலைமைகளும் வேறு, கொள்கையின் பிரகாரம் சகல பிரஜைகளின் அரசியல் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்படல்வேண்டும் என்பதுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லமுடியும் என நான் நினைக்கின்றேன் என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா தெவித்தார்.

தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக எந்த ஒரு நபரும் எனக்கு ஆதரவளிப்பாராயின் அவர் எனது கொள்கைக்காக செயற்படுகின்றார் என்பதாகும். எனது கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

புலிகளுடன் இருந்தவர்களும் சரி பிரபாகரனின் பெற்றோர்கள் ஆயினும் சரி இந்த பிரசாரத்திற்கு ஆதரவளிப்பார்களாயின் அதனை ஏற்றுக்கொள்வேன். எனது கொள்கையை ஏற்று முன்னாள் புலி உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதனை இன்முகத்துடன் வரவேற்பேன் என்றும் அவர் சொன்னார்.

கொ