3 நாள் தங்க ரூ.21 கோடி முதல் விண்வெளி ஓட்டல் 2012ல் திறப்பு

posted in: உலகம் | 0

world1பார்சிலோனா, : உலகின் முதல் விண்வெளி ஓட்டல் Ôகேலாக்டிக் சூட்Õ, 2012ல் திறக்கப்படுகிறது. ரூ.14,100 கோடியில் அமைக்கப்படும் அந்த ஓட்டலில் 3 நாள் தங்க கட்டணம் ரூ.20.7 கோடி. விண்வெளி ஆராய்ச்சியில் முன்னாள் பொறியாளர், சேவியர் கிளாரமன்ட்.

இவர் கேலாக்டிக் சூட் என்ற பெயரில், விண்வெளியில் சொகுசு ஓட்டல் அமைப்பதில் ஈடுபட்டுள்ளார். 2012ல் அதை திறக்க திட்டமிட்டு உள்ளார். விண்வெளி ஓட்டல் அமைக்க ரூ.14,100 கோடி செலவிடப்படுகிறது. Ôகேலக்டிக் சூட்Õ திறக்கப்பட்டதும், அங்கு 3 நாட்கள் தங்க ரூ.20.7 கோடி கட்டணம் செலுத்த வேண்டும்.

முன்பதிவு செய்வோருக்கு, பயண தினத்துக்கு 8 வாரங்கள் முன்பிருந்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.ஒவ்வொரு முறையும் 4 பேர் ஓட்டலுக்கு செல்லலாம். அவர்களுடன் 2 விண்வெளி வீரர்கள் வருவார்கள். பூமியில் இருந்து 450 கி.மீ. உயரத்தில் அமையும் ஓட்டல் என்பதால், பயணிகள் மிதக்க வேண்டியிருக்கும். எனவே, விண்வெளி வீரர்களுக்கான வெல்க்ரோ உடைகள் தரப்படும். அதை அணிந்து ஓட்டல் அறைகளின் சுவரைப் பிடித்து Ôஸ்பைடர்மேன்Õ போல விருந்தாளிகள் நகரலாம். ஓட்டலை ராக்கெட் மூலம் அடைய ஒன்றரை நாள் ஆகும். விண்வெளி ஓட்டல், மணிக்கு 30,000 கி.மீ. வேகத்தில் சுற்றும். அதில் 80 நிமிடத்துக்கு ஒருமுறை பூமியை சுற்றி வரலாம். அதன்படி 24 மணி நேரத்தில் சூரியன் தோன்றி மறைவதை 15 முறை பார்க்கலாம். விண்வெளி ஓட்டலில் தங்க 200 பேர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். www.galactic suite.com என்ற இணையதளம் மூலம் 43 பேர் முன்பதிவு செய்து விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *