அடிக்கடி சிடி ஸ்கேன் எடுப்பதால் புற்று நோய் அபாயம் அதிகரிப்பு

posted in: உலகம் | 0

wl113சான்பிரான்ஸிஸ்கோ: அடிக்கடி எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள கலிபோர்னியோ பல்கலைகழகம் சிடி ஸ்கேன் மூலம் வெளியாகும் எக்ஸ்ரே கதிர்களின் அளவை மதிப்பிட்டுள்ளது. ஒரே மாதிரியான தொழில் நுட்பத்தை பயன்படுத்தினாலும் ஒவ்வொரு சிடி ஸ்கேன மெஷினும் வித்தியாசமான அளவில் எக்ஸ்ரே கதிர்களை வெளிப்படுத்துகின்றன.

ஒரே மருத்துவமனையில் உள்ள ச¤டி ஸ்கேன் மெஷின்களுக்கு இடையில் வெளியாகும் எக்ஸ்ரே கதிர்களைப் பொருத்தமட்டில் 13 மடங்கு வித்தியாசம் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நோயாளிகளுக்கு இந்த அளவு பெரிதும் அபாயமாக அமையக்கூடும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. எக்ஸ்ரே அபாயம், சிடி ஸ்கேன்களால் ஏற்படும் அபாயம் குறித்து ஏராளமான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. மிக அதிகமான எக்ஸ்ரே கதிர் வீச்சுக்கு ஆளாகும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் புதிய கேன்சர் நோயாளிகளாக மாறும் அபாயம் இருப்பதை அந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஓராண்டில் சுமார் 15,000 பேர் புற்று நோயால் உயிரிழக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த சிடி ஸ்கேன்கள் மூலம் ஒருமுறை ஸ்கேன் எடுக்கும் பொழுது வெளிப்படும் எக்ஸ்ரே கதிர்களை மட்டும் வைத்துப் பார்த்தால் பாதிப்பு மிகமிகக் குறைவாகவே தோன்றும். ஆனால் சிடி ஸ்கேன்களின் எண்ணிக்கையும் அவற்றின் மூலம் கிடைக்கும் எக்ஸ்ரே கதிர்களையும் கூட்டிச் சேர்த்து பார்த்தால் மட்டுமே அபாயம் தெரியும். உலகில் ஓராண்டில் மட்டும் 7 கோடி சிடி ஸ்கேன் புதிதாக சேர்க்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் அவற்றின் மூலம் வெளியாகும் எக்ஸ்ரே கதிர்கள் புற்று நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கின்றன. அதன் விளைவாக சாவுகளும் அதிகரிக்கின்றன என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *