பழநி:அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், அடுத்த கல்வி ஆண்டில்(2010-2011), 200 பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும், என பள்ளிக்கல்வி இயக்குனர் பி.பெருமாள்சாமி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: கணினி கல்வி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தமிழ்நாட்டில் தான் முதன் முறையாக கொண்டு வரப்பட்டது. ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி திட்டம் உள்ளது.
இந்த ஆண்டில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு, அனைவருக்கும் இடைநிலை கல்வி என்ற, புதிய கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதற்காக மாநில அரசு, 151 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த புதிய கல்வி திட்டத்தின் கீழ், அடுத்த கல்வி ஆண்டில் (2010-2011) 200 பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். புதிதாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பள்ளி ஒன்றுக்கு, 58 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும்.பராமரிப்பு செலவுக் காக, 25 ஆயிரம், ஆண்டுச் செலவுக்காக 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், என்றார்.
Leave a Reply