புதுடில்லி : “கடந்த 2008-09ம் ஆண்டிலும், தற்போதைய ஆண்டிலும் உரிய இணைப்பு மற்றும் அனுமதி பெறாமல், ஏ.சி.எஸ்., மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை சேர்த்தது எப்படி’ என, டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி ஆராய்ச்சி நிறுவன பல்கலைக் கழகத்திற்கு, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தமருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கி பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் இந்த கேள்வியை கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த கல்லூரியின் சார்பில் ஆஜரான வக்கீல், “”2008-09ம் ஆண்டிற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டு, அதற்கு இந்திய மருத்துவ கவுன்சிலும் ஒப்புதல் வழங்கியுள்ளது,” என்றார்.
உடன் நீதிபதிகள்,”கல்லூரிக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கக் கூடாது என்ற தகவலை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பல்கலைக் கழக மானியக் குழுவுக்கு (யு.ஜி.சி., ) தெரிவித்துள்ளது’ என்றனர்.
கல்லூரி சார்பில் ஆஜரான வக்கீல் இதை மறுத்தார். “கல்லூரிக்கு நிகர்நிலை பல்கலைக் கழக அந்தஸ்து வழங்கும்படி, பல்கலைக் கழக மானியக் குழு பரிந்துரை செய்து விட்டது. மத்திய அரசுதான் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட காலதாமதம் செய்கிறது’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், “”இதுவரை அரசிடம் இருந்து கல்லூரிக்கு எவ்வித அனுமதியையும் நீங்கள் பெறவில்லை. அங்கீகாரம் வழங்குவதற்கு முன் அரசு மேற்கொள்ளும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில், நீங்கள் மாணவர்களை சேர்க்க முடியாது. நீங்கள் 300 மாணவர்களை உங்களுக்கு ஏற்ற வகையில், வழக்கில் ஒரு கட்சிக்காரர்களாக சேர்த்துள்ளீர்கள். அவர்களும், சுப்ரீம் கோர்ட் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பர். நீங்கள் அவர்களுக்கு கல்லூரியில் இருந்து விடுவிப்பதற்கான கடிதம் வழங்க வேண்டும்’ என, தெரிவித்தனர்.
அப்போது, பல்கலைக் கழக மானியக் குழு சார்பில் ஆஜரான வக்கீல், “”சேர்க் கப்பட்டுள்ள மாணவர்களை விடுவிப்பதற்கான கடிதம் வழங் கும்படி சம்பந்தப் பட்ட கல்லூரிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும்’ என, வலியுறுத்தினார்.அதற்கு நீதிபதிகள், “நாங்கள் அவ்வாறு எவ்வித உத்தரவும் பிறப்பிக்க மாட்டோம். தேவை ஏற்பட்டால், பல்கலைக் கழக மானியக் குழுவே, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு எதிராக நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம்’ என்றனர். இதை தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
gani
please read