அலரி மாளிகை இன்று ஒரு அன்னதான சபையாகி விட்டது அதற்குச் சம்பந்தன் வருவாரா எனக் காத்திருக்கிறார் மஹிந்த: ஹக்கீம்

posted in: உலகம் | 0

hakeem-200_அலரிமாளிகை இன்று ஒரு அன்னதானசாலை. இந்த அன்னதான சாலைக்கு சம்பந்தன் வருவாரோ வரமாட்டாரோ என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த. இப்படி இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் இணைத் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை மாலை புத்தளம் ஹீதா பள்ளிவாசல் முன்றிலிலும், புத்தளம் எருக்கலம்பிட்டி ஜும்மாப் பள்ளியிலும் இடம்பெற்ற கூட்டங்களில் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப் பதற்கான காரணங்களை யாழ்., வன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களுக்கும் புத்தளம் பகுதி மக்களுக்கும் அவர் விளக்கினார்.

அச்சமயமே அவர் இவ்வாறு தெரிவித்தார். மு.கா. தவிசாளரும், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான பஷீர் சேகுதாவூத், கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர், முன்னாள் அமைச்சர் நூர்தீன் மசூர், புத்தளம் மாவட்ட ஐ.தே.க. அமைப் பாளர் பாலித்த ரங்கே பண்டார எம்.பி., புத்தளம் நகரசபை உபதலைவர் அலிக்கான், வட மேல் மாகாணசபை உறுப்பினர் எஹியா ஆகியோரும் அங்கு உரையாற்றினர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங் கப்பட்டுள்ள கிழக்கின் ஆயுதக் கும்பல்கள் அரசுக்கு ஆதரவாக இந்த ஜனாதிபதித் தேர்தலில் அட்டகாசம் புரிவதற்கு, ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கும் பிரதான எதிர்க்கட்சிகளின் கூட்டு எவ்விதத்திலும் அனுமதிக்கமாட்டாது.

ரவூப் ஹக்கீம் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

இன்று ஜனாதிபதியின் அலரி மாளிகை ஓர் அன்னதான சாலையாக மாறியிருக்கிறது என்று சகலரும் பேசுகின்றனர். காலை, பகல், இரவு என்ற வித்தியா சமின்றி ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், அரச அதிகாரிகள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் என்று பலதரப்பின ருக்கும் அங்கு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இந்த அன்னதான சாலைக்கு சம்பந்தன் வருவாரோ மாட்டாரோ என்று ஜனாதிபதி வழிமேல் விழி வைத்துக் காத்துக்கொண்டி ருக்கிறார். அப்படியொரு பெறுமதி இன்று தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்குக் கிடைத்திருக்கிறது.

“தேசத்து ரோகிகள்” என்றும், “புலிகளுக்கு வக்காலத்து வாங்கு பவர்கள்” என்றும் அவர்களுக்குச் சேறு பூசிய அரசுக்கும் தற்போதைய ஜனாதிப திக்கும் இப்போது சம்பந்தன் இந்த அன்ன தான சாலைக்கு வருவது மிக அவசியமாகிப் போயுள்ளது.

நாள்தோறும் மூன்று வேளையும், ஜனாதிபதித் தேர்தல்வரையும் உண்ணத் தருவார்கள்.

சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக நாம் நியமித்ததும் நடுக்கம் கொண்டிருக்கும் அரசும், ஆளும் தரப்பும் பாதாளக் கோஷ்டிகளைப் பயன்படுத்தி எம்மைப் பயமுறுத்தப் பார்க்கின்றன. அச்சுறுத்தியும் அடாவடித்தனம் செய்தும் ஜனாதிபதித் தேர்தலில் வென்று விடலாம் என்று மனப்பால் குடிக்கும் அவர்களது எண்ணம் நாளாந்தம் தேய்வடைந்து கொண்டே போகிறது. வேறு வழியில்லாத நிலையிலும் தொடர்ந்தும் பாதாள உலகக் கோஷ்டிகளின் தயவையே அரசு நாடி நிற்கிறது.

இன்று வடக்கு கிழக்கில் ஏற்பட்டிருக்கும் உணர்வலைகளும் எண்ண வெளிப் பாடுகளும் இந்த ஆட்சியை மாற்றியே ஆகவேண்டும் என்ற கருத்தையே வெளிப் படுத்தி நிற்கின்றன. தேர்தல் களில் வாக் களித்துத் தமக்கு எதுவும் நடக்கப் போவதில்லை என்று மூலையில் முடங்கிக் கிடந்தவர்கள் இன்று தீர்மானிக்கும் சக்தி தமது கைகளில் வந்துவிட்டது என்று மகிழ்ச் சியடையும் நிலைமையை ஜெனரல் சரத் பொன் சேகாவின் வருகை ஏற்படுத்தி யிருக்கிறது.

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் அவரது சகாக்களுக்கும் மத்திய அரசுடன் முரண்பாடு ஏற்பட்டு ஆளுநரை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டிருக்கிறது. ஆனால் ஆளுநரை மாற்றி எதனையும் அவர்கள் அடையப்போவதில்லை. ஆட்சியையே மாற்றவேண்டும்.

அளவுக்கு அதிகமாக அதிகாரங்கள் உள்ள இடத்தில் இருந்தே அநியாயங்கள் பிறக்கின்றன என்பதை இவர்கள் உணர வேண்டும்.

உத்தரவாதங்கள் காற்றில் பறக்கவிடப் பட்ட பல வரலாறுகளைக் கண்டவர்கள் நாம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் உள்வாங்கப்பட்டுள்ள ஆயுதக் கும்பல்கள் அரசுக்கு ஆதரவாக இம்முறை தேர்தலில் அட்டகாசம் புரிவதற்கு சரத்பொன்சேகா வுக்கு ஆதரவு வழங்கும் பிரதான கட்சிகளின் கூட்டு எவ்விதத்திலும் அனுமதிக்கப் போவதில்லை. அதற்கான ஏற்பாடுகளுடன் தான் இத்தேர்தலை நாம் சந்திக்க இருக்கிறோம் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *