புதுடில்லி:”பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து கூறுவதாக விளம்பரப்படுத்தும் வெப்சைட் (இணையதளம்)களை தடை செய்ய இயலாது,” என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள் ளது. தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று முன்கூட்டியே கண்டறிவது, “பால் கண்டறியும் தடைச் சட்டம் – 2008’ன்படி குற்றம்.
ஆனால், சர்வதேச அளவில் இயங்கும் இணையதளங்கள், “தாயின் ரத்த மாதிரி மட்டும் அனுப்பி வைத்தால் போதும்; குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்து கூறிவிடுவோம்’ என்று விளம் பரப் படுத்துகின்றன.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஏ.கே.கங்குலி, பி.எஸ். சவுகான் ஆகியோர் முன்னிலையில் இது சம்பந்தமாக நடந்த வழக்கு விசாரணைக்கு வந்தது;
மத்திய நலவாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் பதிலளிக் கையில், “இது போன்ற இணையதளங்கள் உலகளாவிய நிலையில் செயல்படுவதால், அவற்றை தடுக்க முடியாது’ என்று தெரிவித்தார். தன்னார்வ நலவாழ்வு அசோசியேஷன் சார்பில் அதன் வக்கீல், “இது சரியான பதிலல்ல; சர்வதேச அளவில் தடை செய்யப் பட்ட பல இணையதளங்களைச் சுட்டிக் காட்ட முடியும்’ என்று வாதிட்டார்.
இருப்பினும், இணையதளங்களை தடை செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை மனதில் கொண்ட நீதிபதிகள், “இது போன்ற வெப்சைட்களை தடை செய்ய முடியுமா என்பதை ஆராய, மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகங்கள் ஆராய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
Leave a Reply