ராஜ்கோட் : இந்திய அணி ஒரு நாள் போட்டியில் அதிக பட்ச ரன் குவித்து சாதனை படைத்துள்ளது. ராஜ்கோட்டில் இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.
ஒரு நாள் போட்டியில் இந்தியா எடுத்துள்ள அதிகபட்ச ரன் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னராக 2007ம் ஆண்டு பெர்முடா அணியுடன் விளையாடிய போது இந்தியா 413 ரன்கள் எடுத்திருந்தது. சர்வதேச அளவில் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாடி 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள் எடுத்து, அதிக ரன் எடுத்த அணி என்ற பெருமையை தக்க வைத்துள்ளது.
சாதனை : இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள், 2 டுவென்டி- 20 போட்டிகள் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இன்று டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக விளையாடிய சேவாக் – சச்சின் ஜோடி இலங்கை பவுலர்கள் பந்துகளை விலாசி ரன்களை குவித்தனர். சச்சின் 69 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய தோனியுடன் ஜோடி சேர்ந்து சேவாக் 146 ரன்கள் குவித்தார். 68 பந்துகளில் 146 ரன்கள் அடித்தார் சேவாக். இதற்கு முன்னர் 1998ல் அசாருதீன் 62 ரன்களில் 108 ரன்கள் எடுத்திருந்தார். 2008ம் ஆண்டு ராய்னா 68 பந்துகளில் 101 ரன் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சேவாக் ஒரு நாள் போட்டிகளில் 12 வது சதத்தை அடித்தார். கேப்டன் தோனி ஒரு நாள் போட்டிகளில் 5000 ரன்கள் என்ற இலக்கை தோனி அடைந்தார்.
Leave a Reply