இந்திய நிறுவனங்கள் ரூ.786 கோடி நன்கொடை

bs158புதுடெல்லி: பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள 760 நிறுவனங்கள் கட்சிகள், அறக்கட்டளை களுக்கு வழங்கிய மொத்த நன்கொடை, ரூ.786 கோடி ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 8 சதவீதம் அதிகம்.


2008&09ம் நிதியாண்டுக்கான நன்கொடை விவரங்களைத் திரட்டி ஆய்வு நடத்தியதில் பல சுவையான தகவல்கள் தெரியவந்தன. 2008&09ம் ஆண்டில் பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்ட 760 நிறுவனங்களின் மொத்த லாபம் 10 சதவீதம் குறைந்துள்ளது. ஆனாலும் இவற்றின் மொத்த நன்கொடை ரூ.786 கோடியாக உயர்ந்தது. நன்கொடை உயர்வு 8 சதவீதம்.
சென்ற நிதியாண்டில் இந் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடை ரூ.726 கோடி. அது முந்தைய ஆண்டைக்காட்டிலும் 38 சதவீதம் உயர்வாகும். அதே சமயம் இந்த நிறுவனங்களின் ஒட்டு மொத்த வருமானம் 22 சதவீதம் மட்டுமே உயர்ந்தது குறிப்பிடத் தக்கது.
பல நிறுவனங்களின் லாபம் குறைந்துள்ள போதிலும் நன்கொடையை அள்ளி வழங்கியுள்ளன. மொத்தம் 108 நிறுவனங்கள் ரூ.1 கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 20 சதவீதம் அதிகம். நன்கொடை அளித்த நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ரிலையன்ஸ். ரிலையன்ஸ் தந்த தொகை ரூ 82.6 கோடி.முதல் 10 இடங்களைப் பிடித்த நிறுவனங்களின் பட்டியல்: ரிலையன்ஸ், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர், ஜே.பி அசோஷியேட்ஸ், ஹிண்டால்கோ, பார்தி ஏர்டெல், அம்புஜா சிமெண்ட்ஸ், இன்போசிஸ், முந்த்ரா போர்ட், கிராஸிம் மற்றும் டாரென்ட் பவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *