ஈரானில் கலவரம் : 15 பேர் பலி !

posted in: உலகம் | 0

tblfpnnews_32028925419டெஹ்ரான்: ஈரானில் ஏற்பட்ட அரசுக்கெதிரான போராட்டத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர். அங்கு செய்தி சேரிப்பில் ஈடுபட்டிருந்த துபாய் டி.வி., நிருபர் ஒருவரை காணாமல் போய் விட்டார்.


ஈரானில் அசௌரா என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது. அரசுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றபோது அங்கு கலவரம் வெடித்தது. இதில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமுற்றனர். பல இடங்களில் பாதுகாப்பு படையினரும், கலவரக்காரர்களும் மோதிக்கொண்டனர். இதில் எதிர்கட்சி தலைவர் மொசாவி என்பவரது உறவினர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். போலீஸ் வாகனங்கள் பல தீ வைத்துக்கொளுத்தப்பட்டன.

இறந்தவர்கள் போலீசாரால் கொல்லப்படவில்லை என போலீஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். சிலர் பாலத்தில் இருந்து கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில் சிலர் புரட்சி எதிர்ப்பு பயங்கரவாதிகள் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு நகர் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இங்கு செய்திசேகரிப்பில் ஈடுபட்டுள்ள துபாய் டி.வி.,யின் செய்தியாளர் ஒருவர் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. இவர் கலவரத்தில் இறந்தாரா என விசாரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அங்குள்ள போலீஸ் உயர் அதிகாரி அகமது ரய ராடன் என்பவர் கூறுகையில் ; இந்த சம்பவத்தில் தொடர்புடைய 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் சுட்டு யாரும் இறக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *