உலகம் தொட்டுகாட்டும் பிஞ்சு விரல்

posted in: மற்றவை | 0

tblhumantrust_35546076298நினைவு தெரிந்த நாளிலிருந்து…எனச் சொல்வது, எட்டு மாதமாக இருக்குமோ…பிஞ்சு குழந்தையின் நெஞ்சில் பதித்த வண்ணங்களில் உலகமே அடக்கம். நாட்டின் பெயரைச் சொன்னாலே பிஞ்சு விரலில் சுட்டிக்காட்டுகிறது குழந்தை.

கம்ப்யூட்டர் யுகத்தில், அதையும் மிஞ்சும் அறிவு. 23 மாதங்களில் கற்றுக்கொடுத்ததை அப்படியே சொல்லும் சக்தி மழலைக்கும் உண்டு என்பதை உணர்த்துகிறார் ஆலன் ஜோன்ஸ் ராஜா.திருப்பூர், பின்னலாடை தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணியாற்றும் பாளையக்காடு அகஸ்டின்ராஜா விஜயா தம்பதியரின் குழந்தை.இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, இஸ்ரேல், உருகுவே, உக்ரைன், ஐஸ்லாந்து, கனடா, காங்கோ, கியூபா, கிரீஸ், குவைத், சிங்கப்பூர், சூடான், சைப்ரஸ், சைனா, நியூசிலாந்து, நேபால், துருக்கி, தென்கொரியா, தைவான், பனாமா, பாகிஸ்தான், பிரேசில், பின்லாந்து, மெக்சிக்கோ, ரஷ்யா, ரோமானியா, ஸ்பெயின், ஜப்பான், ஜோடான் உள்ளிட்ட 32 நாடுகளின் கொடிகளை சரளமாக கூறுகிறார் இக்குழந்தை. நாடுகளின் பெயர்களை சொன்னால், மெல்லிய விரல்கள் கொடியை தொடுகின்றன. கொடிகளை காண்பித்தால், நாட்டின் பெயரை இனிய மழலையில், அழகாக சொல்வதை கேட்க செவிகள் வேண்டும்.

விலங்கினங்களில் ஊர்வன, பறப்பன பற்றியும் தெரிந்து கொண்டுள்ளார். தமிழ், ஆங்கிலம் இரு மொழியும் பேச கற்றுத் தருகின்றனர்.சிறுவயதில் ஆற்றலை வெளிக்கொணர்ந்தது பெற்றோர் தான். விளையாட்டாகவே கற்றுத் தந்ததை குழந்தை பற்றிக் கொண்டது எளிதாக.குழந்தையோடு நேரத்தை, விளையாட்டாக செலவிடுங்கள். விளையாட்டில், வாழ்க்கைக்கு உதவும் விஷயங்களும் இருக்கட்டுமே…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *