கோல்கட்டா : வீட்டை கைப்பற்ற நினைத்த மகனுக்கு எதிராக, ஒரு தாய் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். முதல்வர், டி.ஜி.பி.,யிடம் புகார் தெரிவித்தும் பயன் இல்லாததால் இப்போது கோர்ட் படி ஏறியுள்ளார்.
கோல்கட்டாவில் சால்ட் லேக் ஏரியாவில் வசிப்பவர் பேலா பட்டாச்சாரியா(65). இவர் தனது கணவர் இறந்த பின் தனியாக வசித்து வருகிறார். இவர் மகன் சம்பக், ஐ.பி.எஸ்., அதிகாரி; நாடியா மாவட்ட எஸ்.பி.,யாக உள்ளார். இவருக்கு சொந்தமான வீட்டை தன் பெயரில் எழுதி வைக்க மகன் மிரட்டி வருகிறான்; தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட துடிக்கும் மகனுக்கு சொத்தை எழுதித்தர தாய் தயாரில்லை. மாநில முதல்வர் மற்றும் டி.ஜி.பி.,க்கு பல முறை புகார் அளித்தும் பலன் இல்லை. அவன் மிரட்டல்களில் இருந்து எனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டிருந்தார். மகன் மீது நடவடிக்கை எடுக்காததால், இறுதிக்கட்டமாக கோல்கட்டா ஐகோர்ட் டில் தனது மகனுக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “நான் எனது கணவர் இறந்த பின் அவர் கட்டிய வீட்டில் வசித்து வருகிறேன். எனது இளைய மகன் சம்பக், எஸ்.பி., யாக நாடியாவில் பணிபுரிந்து வருகிறான். எனது கணவர் இறந்ததற்கு பின் அவன் என்னை காப்பாற்றவில்லை. மாறாக தற் போது சால்ட்லேக் ஏரியாவில் நான் குடியிருந்து வரும் வீட்டை தனது பெயருக்கு மாற்றி கொடுக்கும்படி தொடர்ந்து மிரட் டல் விடுத்து வருகிறான். எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் இருக்கிறது’ என்று கூறியுள்ளார். மனு மீதான விசாரணை, நீதிபதி சட்டோபாதயா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி தனது தீர்ப்பில், வயோதிக தாயின் குற்றச்சாட்டின் மீது நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டார்; பெண்மணிக்கு பாதுகாப்பு அளிக்கும்படி டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டிருந்தார்.
Leave a Reply