காகிதத்தில் மலர்ந்த திருக்குறள்

posted in: மற்றவை | 0

tblhumantrust_93396723271காரைக்குடி : காரைக்குடி ஓவிய ஆசிரியர் பார்த்திபன், திருக்குறள் காகிதப்பூ மலையை வடிவமைத்து உள்ளார். இவர் ஓவியத்தில் புதுமை படைக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர். இதனால் ஓவியத்தில் புதிய முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

கடந்த 2003 ல் “சரித்திரம் அன்று முதல் இன்று வரை’ என்ற வரலாற்று ஓவிய புத்தகம் உருவாக்கினார். 2007ல் ஸ்டாம்ப் அளவு பேப்பரில் (2.9 செ.மீ., நீளம், 3.9 செ.மீ., அகலம்) வானவில், கரும்பலகை என்ற சிறிய ஓவிய புத்தகம் தயாரித்தார். கடந்த ஆண்டு விரல் நுனி அளவில் “சின்ன உலகம்’ (1.செ.மீ., நீளம், 0.5 செ.மீ., அகலம்) என்ற புத்தகத்தை வடிவமைத்தார். இதில் 181 நாடுகளை பற்றிய குறிப்பு, மக்கள் தொகை, நில பரப்பு, ஆட்சிமுறை, மொழி என பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

காகிதப்பூ: தற்போது 1,330 திருக்குறளையும் எழுதி, காகிதப்பூ மாலையாக தொடுத்துள்ளார். அவர் கூறுகையில், “”படிக்கும் போதே கின்னஸ் சாதனைக்காக முயற்சித்து வருகிறேன். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று திருக்குறள் மாலையை இயேசுவிற்கு அணிவித்து மகிழ்வேன். இம்மாலை தயாரிக்க மூன்று மாதம் ஆனது,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *