மதுரை : மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே குழந்தையை கொலை செய்தவருக்கு விசாரணை கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. சாப்டூரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்.
இவருக்கும், மனைவிக்கும் 2001 ஜூன் 27ல் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமுற்ற ஜெயப்பிரகாஷ் நாட்டு துப்பாக்கியால் மனைவியை நோக்கி சுட்டார். அதிலிருந்த குண்டு பாய்ந்து ஐந்து மாத குழந்தை இறந்தது. ஜெயப்பிரகாஷை போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து மதுரை முதன்மை செஷன்ஸ் கோர்ட் 2002 நவ., 11ல் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் மேல்முறையீடு மனு செய்தார். அரசு தரப்பில் வக்கீல் செந்தூர்பாண்டியன் ஆஜரானார்.
மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் ஆர்.ரகுபதி, ஆர்.சுப்பையா கொண்ட பெஞ்ச், “விசாரணை கோர்ட் உத்தரவில் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை. மனுதாரர் ஜாமீனில் இருந்தால் அவரை கைது செய்து, சிறையில் அடைக்க விசாரணை கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என உத்தரவிட்டது.
Leave a Reply