சரத் பொன்சேகாவின் ஆட்சி காலத்தில் புலிகளின் சகல சொத்துக்களும் அரசுடமையாக்கப்படும்: ரணில்

posted in: உலகம் | 0

ranil-38ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அவரின் ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல சொத்துக்களும் அரசுடமையாக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


வெளிநாட்டு வங்கிக் கணக்குகள், தங்கக் கையிருப்பு, கட்டிடங்கள் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு அரசுடமையாக்கப்படும் புலிகளின் சொத்துக்கள் அரசாங்கக் கடன்களை செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட சொத்து விபரங்களை முடிந்தால் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச ரீதியில் 600 வங்கிக் கணக்குகள் காணப்படுவதாக அரசாங்கம் அறிவித்த போதிலும், சுமார் 2000 வங்கிக் கணக்குகள் காணப்படுவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *