பெங்களூர்: உலகின் மிகப்பெரிய கண்டெய்னர் ஷிப்பிங் நிறுவனமான மெர்ஸ்க் லைன் தனது அமெரிக்க- சென்னை நேரடி கப்பல் போக்குவரத்தை வரும் பிப்ரவரி 5-ம் தேதி முதல் நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
இதற்கு பதில் அமெரிக்காவிலிருந்து நேரடியாக கொழும்புக்கு இந்த கண்டெய்னர் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுக வர்த்தகத்துக்கு விழுந்த பெரும் அடியாகவே இது பார்க்கப்படுகிறது.
இந்த மெர்ஸ்க் லைன் நிறுவனம் டேனிஷ் நாட்டின் பிரபலமான ஏபி மோல்லர் மெர்ஸ்க் குழுமத்தைச் சேர்ததாகும்.
2007-ம் ஆண்டு இந்தப் போக்குவரத்து துவக்கப்பட்டது. அன்றைக்கு கண்டெய்னர் ஷிப்மெண்ட் சர்வீஸ் உச்சத்தில் இருந்தது. ஆனால் இப்போது சர்வதேச பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இருநாடுகளுக்கும் இடையிலான சரக்குப் போக்குவரத்து குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதன்காரணமாகவே மெர்ஸ்க் லைன் தனது போக்குவரத்தை நிறுத்திவிட்டு, அதை கொழும்புக்குத் திருப்பிவிட்டுள்ளது.
இனி தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்கள் கொழும்பு துறைமுகம் வழியாகவே செல்ல வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை விட்டால், சிங்கப்பூர், மலேஷியாவின் கிலாங், துபாய் அல்லது சலாலா மூலமாக மட்டுமே ஏற்றுமதியைத் தொடர முடியும்.
சரக்கு ஏற்றுமதிக்காக மட்டுமே ஆண்டுக்கு ரூ 1000 கோடி வரை செலவிடுகிறது இந்தியா.
Leave a Reply