வாஷிங்டன் : முகாம்களில் வசிக்கும் தமிழர்களை மறு குடியமர்த்தும் பணிகளுக்காக, இலங்கைக்கு 385 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
உலக வங்கியின் இலங்கைக்கான இயக்குனர் நோகோ இஷி கூறியதாவது:இலங்கையில் முகாம்களில் வசித்த ஒரு லட்சம் தமிழர்கள், அவர்களது சொந்த ஊர்களில் மறு குடியமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு அடிப்படை வசதிகளையும், கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்துவதற்கு, பெரிய அளவில் நிதி தேவைப்படுகிறது. இங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது என்பது மிகவும் சவாலான பணி. இதற்கு உதவும் வகையில் இலங்கைக்கு 385 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உலக வங்கி ஒப்புதல் தெரிவித்துள்ளது. இலங்கையில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு மற்ற அமைப்புகளும் உதவ வேண்டும்.
Leave a Reply