திண்டுக்கல் : நகைக்கடை சுவரில் துளையிட்டு 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிய போலீஸ்காரர் உட்பட 5 பேருக்கு மூன்றாண்டு ஜெயில் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
திண்டுக்கல் மெயின் ரோட்டில் ஏ.எம்.டி., நகைக்கடையில், 28.12.2007ல் சுவரில் துளையிட்டு 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை சிலர் திருடிச் சென்றனர். இது குறித்து நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடலூரில் கடலோர போலீசாக பணியாற்றிய ராஜேந்திரன், இவரது நண்பர்கள் கண்ணன், அதிரூபன், ராஜா, சபாபதி ஆகிய 5 பேரையும் கைது செய்து திண்டுக்கல் ஜே.எம்.2 கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த கோர்ட், ராஜேந்திரன் உட்பட ஐந்து பேருக்கும் மூன்றாண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து 5 பேரும் திண்டுக்கல் விரைவு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த, விரைவு கோர்ட் நீதிபதி ராஜூ, கீழ் கோர்ட் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.
Leave a Reply