சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்படும். இதற்காக நட்சத்திர ஓட்டல்களில் பிரமாண்ட மேடைகள் அமைக்கப்பட்டு ஆடல்- பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
2007-ம் ஆண்டு சவேரா ஓட்டலில் நீச்சல் குளம் மேல் பகுதியில் மேடை அமைத்து நடன நிகழ்ச்சி நடத்தினார்கள். அப்போது மேடை சரிந்து விழுந்து 3 பேர் உயிர் இழந்தனர். இதன் பிறகு 2 ஆண்டுகளாக புத்தாண்டு கொட்டாட்டங்களுக்கு போலீசார் கடும்கட்டுப்பாடு விதித்து வருகிறார்கள்.
இந்த ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சென்னை நட்சத்திர ஓட்டல்கள் தயாராகி வருகின்றன.
இதையடுத்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் என் னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ஆலோசிப்பதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசன கூட்டம் நடந்தது.
கமிஷனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூடுதல் கமிஷனர் ரவி, இணை கமிஷனர் ரவிக்குமார், சேஷசாயி, சக்திவேலு, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 60-க்கும் மேற்பட்ட நட்சத்திர ஓட்டல்களின் பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அப்போது நட்சத்திர ஓட்டல்களில் நீச்சல்குளம் அருகே புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தக்கூடாது. இரவு 11 மணிக்கு மேல் மதுபார்களை திறந்து வைத்திருக்க கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டது.
Leave a Reply