திமாபூர் : நாகாலாந்து மாநிலத்தின் முன்னேற்றத்தில் இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் முக்கியப் பங்காற்றியுள்ளனர். அவர்களை, அம்மாநில மக்கள் கவுரவப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில், பழங்குடியின மக்கள் அதிகம் வாழ்கின்றனர். அவர்களுக்கு இன்னும் நவீன வசதிகள் முழுமையாகக் கிடைக்கவில்லை.அம்மாநிலத்தின் தலைமைச் செயலர்களாக நீண்ட காலமாகப் பணியாற்றியவர்கள் ஏ.எம். கோகலே, ஆர்.எஸ்.பாண்டே என்ற இரு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்.
இவர்களில், பாண்டே இப்போது பெட்ரோலிய அமைச்சகத்தில் செயலராகப் பணிபுரிகிறார்.நாகாலாந்து நிர்வாகம் வளர்ச்சியடைந்து, அதன் பயன், நாகா மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற அக்கறையுடன்,கோகலே, “கிராம மேம்பாட்டு வாரியம்’ (வி.டி.பி.,) என்ற நிர்வாக அமைப்பையும், பாண்டே, அரசு நிர்வாகங்கள் தங்கள் சேவைகளை கிராமப்புறங் களுக்குத் தருவதை உறுதிப்படுத்தும் அமைப்பாக “கிராம கம்யூனிட்டைசேஷன்’ (வி.சி.,) என்பதையும் ஆரம்பித்தனர்.இந்த இரு அமைப்புகளிலும் பொதுமக்களே ஆர்வமுடன் இணைந்து பணியாற்றும் விதமாக சில வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தந்தனர்.மாநிலம் முழுவதும் இதுவரை 1,100 வி.டி.பி., அமைப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இதன் பயனாக மாநில மற்றும் மத்திய அரசுகளின் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் பல கிராமங் களை முழுமையாகச் சென்றடைந்திருக்கின்றன.
Leave a Reply