லண்டன் : கண்டதுக்கெல்லாம் சர்வே எடுக்கும் லண்டனில் நாயோடு வாக்கிங் போவது நல்லதா கெட்டதா என்று சர்வே எடுத்து நல்லதுதான் என்று கண்டுபிடித்துள்ளனர். “பிரிட்டிஷ் வீட்டு விலங்கு நலவாழ்வு’ நிபுணர்கள், நாய் வளர்ப்பவர்கள் தினமும் இருமுறையாவது வாக்கிங் செல்வது என்பது ஒரு வாரத்துக்கு 8 மணி நேரம் உடற்பயிற்சி செய்வதற்கு சமானம் என்று கண்டுபிடித்துள்ளனர். இது பற்றி ஐயாயிரம் பேர்களிடம் ஆய்வு நடத்தினர். அவர்களில், மூவாயிரம் பேர் நாய் வளர்ப்பவர்கள்.
அந்த ஆய்வு தெரிவிப்பதாவது: 57 சதவீதம் பேர் நாயோடுதான் வாக்கிங் செல்கின்றனர். இதுதான் அவர்கள் செய்யும் பெரிய்ய… எக்சர்சைஸ். மூன்றில் ஒரு பங்கு, அதாவது 16 சதவீதம் பேர்தான் ஜிம் செல்கின்றனர். இவர்களில், 86 சதவீதம் பேர் வீட்டு விலங்குகளை வெளியில் கூட்டிச் செல்கின்றனர். 22 சதவீதம் பேர் அதை ஒரு சிறிய வீட்டு வேலையாகவே செய்கின்றனர். மேலும் அப்படி வாக்கிங் செல்லும்போது புதியவர்களின் அறிமுகம் வேறு கிடைப்பதாக நாய் உரிமையாளர்கள் தெரிவிக் கின்றனர். ஜிம்முக்குச் செல்வதை விட கூடுதல் பலனை இந்த வாக்கிங் தருகிறது. தினசரி உடற்பயிற்சிகளை சுறுசுறுப்புடன் செய்வதற்கும் இந்த வாக்கிங் உதவுவதாகத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வு கூறியுள்ளது. நாயுடனான வாக்கிங் இதய நோயை நீக்குவதாகக் கூறுகின்றனர். “நீங்கள் நாய் வைத்திருப்பது நல்லது. ஒரு வாரத்துக்கு மூன்றிலிருந்து ஐந்து முறை நடைப்பயிற்சி மேற்கொள்வதால் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் தூய்மையடைகின்றன என்று இங்கிலாந்து அரசு சொல்கிறது. நாயோடு நடப்பவர்களுக்கு இந்தப் பலன் கூடுதலாகவே கிடைக்கிறது” என்கின்றனர் நிபுணர்கள்.
Leave a Reply