ஆஸ்லோ : அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு நேற்று வழங்கப்பட்டது. வன்முறை இல்லாத போராட்டத்துக்கு வழிவகுத்த மகாத்மா காந்தி, உலக அமைதிக்கான முயற்சியில் முக்கிய பங்கு வகிப்பதாக ஒபாமா தன்னுடைய உரையில் புகழாரம் சூட்டினார்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கும் விழா நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இதில் உலக அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பெற்றுக் கொண்டார். இதன் மூலம். நோபல் பரிசை பெற்ற 4வது அமெரிக்க அதிபர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. பரிசை பெற்றுக் கொண்ட ஒபாமா பேசியதாவது:
ÔÔஅணு ஆயுதமற்ற உலகை உருவாக்குவது மற்றும் உலக நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்தும் எனது முயற்சிக்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த பரிசைப் பெறுவதற்கு தகுதியான பல தலைவர்கள் உலகில் உள்ளார்கள்.
போர் இல்லாத உலகை உருவாக்குவதற்கு மகாத்மா காந்தி மற்றும் மார்டின் லூதர் கிங் உள்ளிட்ட பல தலைவர்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர். ÔÔவன்முறையின் மூலம் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியாதுÕÕ என மார்டின் லூதர் கிங் தெரிவித்துள்ளதை நினைவு கூறுகிறேன். இவர்களது வழிகாட்டுதல் முன் உதாரணமாக விளங்குகிறதுÕÕ என ஒபாமா தெரிவித்தார்.
உலக நாடுகளிடையே அணு ஆயுதங்களை ஒழிப்பது, பூமி வெப்பமயமாவதைத் தடுப்பது மற்றும் உலக நாடுகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது உள்ளிட்ட உலக அமைதிக்கான முயற்சியில் ஒபாமா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இவரின் இந்த முயற்சியை கவுரவிக்கும் வகையில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
Leave a Reply