விடுதலைப் புலிகள் தம் மீது தாக்குதல் நடத்தக் கூடிய சாத்தியம் உள்ளது என்று முன்னாள் இராணுவத்தளபதியும், ஜனாதிபதி தேர்தல் எதிரணிகளின் பொது வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா அச்சம் வெளியிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் உயிர் தப்பியிருக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் இடம்பெயர் மக்களுடன் சேர்ந்திருக்கக் கூடுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்தவை வருமாறு…
விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கொல்லப்பட்ட போதிலும், சில தற்கொலை குண்டுதாரிகள் எஞ்சியிருக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னமும் உறுதியாகவே காணப்படுகின்றது.
எனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது. யுத்த வெற்றிக்கு நாமே காரணம் என படையினரும், பொலிஸாரும் நம்புகின்றனர்.
கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றார்.
Leave a Reply