போர்ப்ஸ் பட்டியல் தகவல் 8 அமெரிக்க கம்பெனிக்கு தலைமை வகிக்கும் இந்தியர்

bs296வாஷிங்டன் : அமெரிக்காவின் 8 மிகப் பெரிய கம்பெனிகளுக்கு இந்தியர்கள் தலைமை வகிப்பதாகவும், வேறெந்த நாடும் இந்தப் பெருமை பெறவில்லை என்றும் போர்ப்ஸ் பத்திரிகை பட்டியல் தெரிவிக்கிறது.பட்டியல் வருமாறு:

அமெரிக்காவின் பெரிய குழுமங்களுக்கு வேறெந்த நாட்டினரும் இல்லாத அளவாக 8 இந்தியர்கள் தலைமை வகிக்கின்றனர். அமெரிக்காவில் குடியிருக்க வரும் வெளிநாட்டினரில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையில் இருந்து இது மிகப் பெரிய மாற்றம்.அமெரிக்காவில் 10 ஆண்டுக்கு முன்பு ஒரு இந்தியர் கூட இந்தளவு மிகப் பெரிய பொறுப்பில் இருந்ததில்லை. இப்போது 8 இந்தியர்கள், அமெரிக்க முன்னணி நிறுவனங்களின் தலைவர்களாக உள்ளனர்.

மற்ற நாட்டினரைவிட எல்லா விதத்திலும் இந்தியர்கள் முன்னேறி உள்ளனர். இந்தியர்களின் ஆங்கிலப் புலமை, உயர்கல்வி ஆகியவை அமெரிக்காவில் அவர்களுக்கு முக்கிய அந்தஸ்தை அளித்து வருகின்றன. பெப்சி நிறுவனத் தலைவர் இந்திரா நூயி, சிட்டி குழும தலைமை செயல் அதிகாரி விக்ரம் பண்டிட் ஆகியோர் உலகம் முழுவதும் ஏற்கனவே பிரபலம்.மேலும், பிம்கோ குழும நிர்வாக இயக்குனர் நீல் காஷ்கரியும் இந்தியர். காக்னிஜன்ட் டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவன தலைவர் பிரான்சிஸ்கோ டி சவுசா, அடோப் சிஸ்டம்ஸ் தலைவர் ஷாந்தனு நாராயன், க்வெஸ்ட் டயாக்னாஸ்டிக்ஸ் தலைவர் சூர்யா மகோபத்ரா, ஹர்மன் இன்டர்நேஷனல் தலைவர் தினேஷ் பாலிவால், சிக்மா&அல்ட்ரிச் தலைவர் ஜெய் நாகர்கட்டி, எல்எஸ்ஐ நிறுவன தலைவர் அபிஜித் தல்வால்கர் ஆகியோரும் இந்தியர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *